
மழை காலத்து காலை நேரம்
அலுவலக வாயில் ஓரம்
தேரிலே
வந்திறங்கினாள்
என் தேவதை !
தேரோட்டியாக
அவள் தந்தை !
அதுவரை இடைவிடாது
பெய்துவந்த அடைமழையும்
அவளுக்காக சிலகணம்
பணிந்து நின்றது !!
தேரிலிருந்து இறங்கியவள்
தூறலிலே நனைந்து
அலுவலகப் பணிமனைக்குள்
அடியெடுத்து செல்லும்வரை !
நான்காம் தளத்திலிருந்து
அவளையே கவனித்திருந்தேன்
கையில் தேநீர் குவளையுடன் !
மெல்லத் துள்ளியவள்
உள்ளே வந்தவுடன்
மீண்டும் அடைமழை !
இம்முறை
என் மனதிற்குள்ளும் தான் !!

